உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


வீட்டுக்கு அழைத்தான். ஆனால் அவன் அந்த முலாம் பழங்களை நறுக்கிய போது, அதிலிருந்து கூட்டம் கூட்டமாகத் தேனீக்கள் கிளம்பின.

ஒவ்வொன்றும் ஒரு கொட்டைப் பாக்கு அளவு பெரியதாக இருந்தது. அவை அந்தப் பணக்காரனையும் அவனது உறவினர்களையும் கன்னம், உதடு, கண்ணிமை எல்லாம் வீங்கிப் போகும் வரை கொட்டி விட்டன.

ஆனால் இந்த இரக்கமுள்ள நல்ல மனிதன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். பேராசை பிடித்த தன் அண்டை வீட்டுக்காரனை எண்ணி அவன் நகைத்தான்.