பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

 அப்படியானால் நானே எடுத்துச் செல்கிறேன் இங்கே பாருங்கள் இந்த பூனையோ நடுங்கிக் கொண்டு இருக்கிறது. இதனை இங்கு விட்டு விட்டுச் செல்லமுடியாது. என் அம்மா அனுமதிக்கா விட்டாலும் கூட பரவாயில்லை. இதனை என் அறையில் மறைத்து வைத்திருப்பேன். எங்காவது போனால் என்னோடு எடுத்துச் செல்வேன் என்றான் அல்யான்.

அல்யான் பூனைக் குட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.

"அருமையான பூனைக் குட்டி" என்றார் தந்தை.

"நமக்குப் பூனைக் குட்டி தேவையில்லை" என்றாள் அம்மா.

"ஆனால் பூனைக் குட்டிக்கு நாம் தேவை" என்றான் அல்யான்.

"பாவம், போனால் போகட்டும். தாய்ப் பூனை இல்லாத குட்டியை காப்பாற்-