பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

 அப்பா, உனக்கு நிறப் பார்வைக் கோளாறு ஏற்பட்டு விட்டது போலும் என்றான் அல்யான்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மூன்று குட்டிகளும் வெளியே வந்தன. உடனே தந்தை இருப்பிடத்திலிருந்து குதித்தெழுந்தார்.

இரண்டுக்கு மேல் அல்லவா இருக்கின்றன? வெவ்வேறு நிறமாக இருக்கிறதே! என்று கத்தினார் தந்தை.

வேறு வழியில்லை - என்று எண்ணிய அல்யான் சொன்னான்.

பாவம்; இந்த பூனைக் குட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததால் அவற்றிற்கு பசி எடுக்கத் தொடங்கி விட்டது, பாலாடைக் கட்டியின் வாசனையைக் கண்டதும் அவை வெளியே ஓடி வங்து விட்டன. அம்மா! அவை பெரியதாகும் வரையாவது நம் வீட்டில் இருக்கட்டும் என்று கெஞ்சினான் அல்யான்.