பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

 எனக்கு குட்டிகள் இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்றார் தந்தை.

சரி இப்பொழுது முழுக் கதையையும் சொல். உன்னிடம் எத்தனை குட்டிகள் இருக்கின்றன? நூறா? இருநூறா?

இல்லை, இல்லை. மூன்றே மூன்று தான். வேண்டுமானால் இன்னும் கொண்டு வர முடியும், என்றான் அல்யான்.

அது தான் கேட்டேன். சரி, மூன்று மட்டும் என்றால் இருந்து விட்டு போகட்டும். -

தாங்கள் அதிகார பூர்வமாகத் தங்க முடிவெடுத்தாகி விட்டது என்பதை புரிந்து கொண்டதைப் போல் பூனைக் குட்டிகள் மேசை, நாற்காலி மீது ஏறிக் குதித்து விளையாடத் தொடங்கி விட்டன.

சில நாட்கள் கழிந்தன.

சலாஸ்கின் வீட்டின் நாய் காணாமல் போய் விட்டது. எனவே சலாஸ்கின்