பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நாரைக்கு இரண்டே கால்கள் தான் இருக்கின்றன.

நாரை நடனமாடுவதை நிறுத்தி விட்டு நரியைப் பார்த்தது, நரிக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு கால்கள் இருப்பதைக் கண்டு, நாரை தனது அலகைத் திறந்து வியப்படைந்தது.

"ஓ! எவ்வளவு பெரிய அலகு! இருந்து என்ன பயன்? ஒரு பல்லாவது இருக்கிறதா? ஹா... ஹா... ஹா...

நரி தன் பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் உரக்கச் சிரித்தது.

உடனே நாரை தன் அலகை மூடிக் கொண்டு வெட்கத்தால் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது.

ஹா... ஹா...! உன்னுடைய காதுகள் எங்கே? காதுகள் இல்லாமல் தலை உண்டா? ஏய், நாரையே? உன் மண்டையில் ஏதாவது இருக்கிறதா? இல்லை, அதுவும் காலியா? என்று ஏளனம் செய்தது நரி.