பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



ஏழையிடம் பணம் இல்லை. எனவே வாடகைக்குப் பதில் ஏழையிடம் அதிக வேலை வாங்கினான். இரவும், பகலும்,ஓயாது உழைக்கச் செய்தான்.

அப்படி உழைத்தும் பயன் இல்லை. இறுதியில் பணக்காரன், ஏழையை அவனுடைய சேவலோடு குளியல் அறையை விட்டுத் துரத்தி விட்டான். பாவம் அங்த ஏழை!

இருக்க இடமின்றி நடுத் தெருவில் சேவலுடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அவனது கண்களில் நீர் வழிந்தது.

பணக்காரனின் இரக்க மற்ற செயலைக் கண்ட சேவலுக்குக் கோபம் வந்து விட்டது.

கவலைப் பட வேண்டாம். இதோ நான் போகிறேன். அந்தப் பணக்காரனிடம் நானே நேரில் போய்ப் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு சேவல் பணக்காரனின் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.