இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39
சேவல், கரடி, ஓநாய் போய்க்கொண்டிருக்கும் போது இடையிலே ஒரு வேட்டைப் பருந்தைச் சங்தித்து அதனையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு போயின.
அவை எல்லாம் பணக்காரன் வீட்டை அடைந்தன. கரடி, ஓநாய், வேட்டைப் பருந்து ஆகியவை புதர்களுக்கிடையே ஒளிந்து கொண்டன. சேவல் மட்டும் பணக்காரனின் வாயிற் கதவின் மேலே உட்கார்ந்து கொண்டு உரக்கப் பாடத் தொடங்கியது.
கொக் - கரக் - கோ...ஏ. பணக்காரா. நான் சொல்வதைக் கேள்!
என் எஜமானனை நீ குளியல் அறையிலிருந்து துரத்தினாய். இப்போது நான் உன்னை இங்த வீட்டை விட்டே துரத்தப் போகிறேன் என்று பாடியது சேவல்.
மாடியில் அமர்ந்திருந்த பணக்காரன், சேவலின் பாட்டைக் கேட்டு சினமுற்று வேலையாட்களை அழைத்து. சேவலைப் பிடித்து வாத்துக் கூண்டினுள் போடச் சொன்னான். அப்போதுதான். வாத்துக்கள்