உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அலகினால் கொத்தியது. அப்பொழுது மரப் பட்டையிலிருந்து துகள்கள் தெறித்தன.

இதனைக் கண்ட ஈ, வால் இல்லாமல் மரங்கொத்தி வாழ முடியாது என்று எண்ணியது. தன் பயணத்தை மேலும் தொடர்ந்தது.

காட்டில் ஒரு புதருக்கு இடையில் பெண் மான் அழகான, மிருதுவான, வெண்மையான சிறிய வாலுடன் நின்று கொண்டிருப்பதை ஈ கண்டது.