பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நீ எப்படி என் வாலைக் கேட்கிறாய்? நான் என் வாலைக் கொடுத்து விட்டால் என் குட்டி இறந்து விடும் என்றது அச்சத்துடன் மான்.

உன் வாலுக்கும், உன் குட்டிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டது.

சரி, ஒரு ஓநாய் எங்களை விரட்டிக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம். நான் உடனே ஒடிப்போப் அடர்ந்த மரங்களுக்கு இடையே என்னை மறைத்துக் கொள்வேன். மரங்களின் இடையே என்னை யாரும் கண்டு பிடிக்க முடியாது.

எனவே நான் என் சிறிய வாலை மட்டும் கைக் குட்டையை போல் ஆட்டி அசைத்து "இந்தப் பக்கம்" என்று சமிக்ஞை செய்வேன். என் குட்டி அதை பார்த்துப் புரிந்து கொண்டு என்னைத் தொடரும். இப்படித் தான் நாங்கள் ஒநாயிடமிருந்து தப்பித்துக் கொள்கிறோம் என்றது மான்.