பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அங்கிருந்து பறங்து போன ஈ, வழியிலே ஒரு நரியைப் பார்த்தது; அதன் அழகான வாலைப் பார்த்து எனக்குத் தரமாட்டாயா? என்று கேட்டது.

ஒ! முடியாது. என்னால் கொடுக்க முடியாது; வால் இல்லாவிட்டால் வேட்டை நாய்களிடமிருந்து எங்களால் தப்பிக்க முடியாது. அவை எங்களை எளிதில் பிடித்து விடும் என்றது நரி.

அது எப்படி? என்று கேட்டது ஈ.

நாய், என்னைப் பிடிக்க வந்தால் என் வாலை ஒரு புறமும், உடலை ஒரு புறமும் திருப்புகிறேன். நாய் என் வாலைப் பார்த்து பின் தொடரும் பொழுது, நான் வேறு திசையில் ஒடி விடுகிறேன் என்று நரி சொன்னது.

எல்லா மிருகங்களுக்கும் வால் அவசியம் என்பதை ஈ உணர்ந்தது. இருப்பினும் வீட்டிற்கு வந்து மறுபடியும் அதைப் பற்றிச் சிந்தித்தது.