பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


நான் மனிதனிடம் சென்று தொந்தரவு செய்து எப்படியாவது வாலை வாங்கி வருவேன் என்று கூறிக் கொண்டது.


அந்த மனிதன் வீட்டில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஈ, ஜன்னல் வழியாக அங்கு சென்று நேராக அவனது மூக்கின் மேல் உட்கார்ந்தது. மனிதன் மூக்கின் மீது ஒரு தட்டுத் தட்டியதும், ஈ அவனுடைய புருவத்துக்குத் தாவியது. புருவத்தில் தட்டியதும் மூக்குக்கு வங்தது.


உனக்குப் புண்ணியம் உண்டு. என்னைத் தனியாக இருக்க விடேன். தொந்தரவு செய்யாமல் இருக்க் மாட்டாயா? என்றான் மனிதன்.


நான் சும்மா இருக்க மாட்டேன். நீ தான் என்னை கேலிப் பொருளாக்கினாய். நீ ஏன் என்னை வாலைத் தேடி வரும்படி அனுப்பினாய்? நான் எல்லா மிருகங்களை-