உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


யும் கேட்டேன். அவை அனைத்துக்கும் வால் அவசியமாம் என்று ஈ கூறியது.


ஈயிடமிருந்து எளிதில் தப்ப முடியாது என்று எண்ணிய மனிதன், சற்று யோசித்து விட்டுக் கூறினான்.


அதோ பார், அங்கே ஒரு பசு இருக்கிறது. அதனிடம் சென்று எதற்காக வாலை வைத்திருக்கிறது என்று கேட்டு வா என்றான்.


சரி நான் போய் கேட்பேன். பசு தன் வாலைக் கொடுக்கா விட்டால், உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்றது ஈ.


உடனே ஈ ஜன்னலின் வழியாக வெளியே சென்று, பசுவின் மீது உட்கார்ந்தது.



பசுவே, பசுவே உனக்கு வால் எதற்கு?