பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

 நண்பனே, பயப்படாதே. சமீபத்தில் தான் உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்று சட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது, எனவே இனிமேல் மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளாது. ஆகவே நீ பயப்படத் தேவையில்லை.

அப்படியா! அது நல்லது தான். அதோ பார், நாய்கள் இப்பக்கமாக ஒடி வருகின்றன. அவற்றைப் பார்த்து ஒட வேண்டிய அவசியமில்லை. நீ இங்கே இருக்கலாம் என்றது குருவி.

”நாய்கள்” என்ற வார்த்தையைக் கேட்டவுடனே குள்ளநரி ஒட்டம் பிடிக்கத் தொடங்கியது.

நீ எங்கே ஒடுகிறாய்? உலகில் அமைதி நிலவ வேண்டும் என்ற சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே. பின் ஏன் ஒடுகிறாய்? நாய்கள் உன்னைத் தொடாது என்றது குருவி.

யாருக்குத் தெரியும்? அங்த அறிவிப்பை நாய்கள் இன்னும் அறிந்திருக்காமல் இருக்கலாம் என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது குள்ளநரி.