பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 101

நிறுத்தி விட வேண்டும். வளையத்திற்கு அருகில் எதிர்க் குழுவினரில் எவரையும் தனியாகக் குறி பார்த்து விடக் கூடாது. அந்த நிலையை எப்பொழுதும் நாம் அனுமதிக்கக்

கூடTது.

இப்பொழுது முக்கியமான இரண்டு காவல் முறைகளே மட்டும் இங்கு காண்போம்.

தடுக்கும் குழுவினர் ஐவரும் (Defense Team) தங்களுக்குரியதான இடங்களில் நின்று கொண்டு எதிர்க் குழுவினர் பந்துடன், வளையத்திற்கு அருகில் குறி பார்த்து எறியாதவாறு பார்த்துக் கொள்ள, கைகளை வீசியும், அசைத்தும், குறியை மறைக்க முயற்சிக்க வேண்டும். அவர்கள் தூரத்தில் இருந்து பந்தை எறிவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

அருகில் வந்து எளிதாகப் பந்தை எறிவதற்கு இடமே தரக் கூடாது. நம் பொறுமையைச் சோதித்துக் கோபத் தைக் கிளப்பும் வகையில் அவர்கள், அவர்களுக்குள்ளே பந்தைக் கை மாற்றிக் கொண்டு (Pass) இருந்தாலும், நாம் பொறுமையை இழந்து ஏமாந்து போகக் கூடாது. இதைத் தான் நாம் எல்லைக் காவல் (Zone Defence) என்று கூறுகின்றாேம்.

இரண்டாவது காவல் முறை இன்னும் வலிமை யுடையது. எதிர்க் குழுவில் உள்ள சிறந்த ஆட்டக்காரரைத் தடுக்கும் குழுவினரில் ஒருவர் எப்பொழுதும் பின் பற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். இன்னும், அதில் உள்ள ஐவருக்கும் இவர்கள் ஐவரும், ஒருவருக்கு ஒருவர் என்று (Man to Man) காவல் செய்யும் நிலைமையும் ஏற்படும். தான் காக்கின்ற ஒரு ஆட்டக்காரர் ஆடுகளத்திற்குள் எங்கு சென்றாலும், அவரைப் பின் பற்றியே செல்வதைத் தான் தனியாள் காவல் முறை (Individual Defence) GT6I DI கூறுகிறார்கள்.