பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

(மற்ற காவல் முறை நுணுக்கங்களை ஆட்டத்தில் கலந்து ஆடி உணர்ந்து கொள்க).

காவல் காக்கும் முறையிலே தனிப்பட்ட ஆட்டக் காரர்கள் தங்களுக்குரியத் தடுக்கும் பணியைத் திறம்பட ஆற்றுவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. தடுக்கும் வழியில் கவனிக்கப் பட வேண்டிய சில விதிகளை இங்கு காண்போம்.

எந்த நேரத்திலும், எந்தத் திசையிலும் எந்தப் பக்கமும் நகர்வதற்கும் ஒடுவதற்கும் தயாராக, தடுப்பவர் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை அகலமாக விரித்தபடி நிற்காமல், குறுகிய இடைவெளி கொண்டுதான் நிற்க வேண்டும். முன்னேறுவோர் குறி பார்க்காதவாறு தடுக்க வேண்டும். கைகளிரண்டையும் பக்கவாட்டில் அகல விரித்தும், அசைத்தும், தலைக்கு மேலே உயர்த்தியும், ஒரு கை மேற் புறமும், மறு கை பக்கவாட்டிலும் அசைத்தி வண்ணமிருந்து, சமயம் பார்த்து மேற் கூறிய வழிகளில் ஒன்றைப் பின் பற்றித் தடுக்க வேண்டும்.

தடுக்க வேண்டும் என்ற குறிக்கோளையே எண்ணி, எதிர்க் குழுவினரின் வழியைத் தடுக்கவோ, மறைக்கவோ, ஆளை இடிக்கவோ, முரட்டுத் தனமாகப் பந்தைத் தட்டுவது போல் ஆளைத் தள்ளவோ, அடிக்கவோ முயலக் கூடாது. மூன்றடித் தூரம் எட்ட இருந்தே தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இன்னும், கைத் திறன் பயன்படுவது போல கால் திறனையும் அதிகமாகக் கவனித்து உபயோகிக்க வேண்டும். எனவே, காவல் செய்து தடுக்க வேண்டும் என்ற ஆவலில் கட்டு மீறி செல்லாது, கடமையை நினைத்து, விதி வழி நடந்து ஆடுவதே, பெருமையையும் புகழையும் தரும். அதுவே ஆட்டத்தால் நாம் பெறுகின்ற பயன் என்பதையும் நாம் உணர வேண்டும்.