பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றம்

கைகளிளுல் அடித்து விளையாடுவதால் இதைக் கைப்பந்தாட்டம் என்கிருேம். இதைச் சிலர் கையுறைப் பந்து’ என்றும், வலைக்கு (Net) மேலே உயரத்தில் பந்தை இருத்தி ஆடுவதால் உந்து பந்து’ எனவும் கூறுகின்றனர். தெளிவாகவும் எளிமையாகவும் இருக்க, கைப்பந்தாட்டம் என்றே நாம் கொள்வோம்.

கைப்பந்தாட்டமும் அமெரிக்காவின் ஒரு அரிய படைப்பாகும். உழைப்பிற்கும் உற்சாகத்திற்கும், உடல் வலிவிற்கும், பொலிவிற்கும் ஊக்கம் தருவது உடற் பயிற்சியே’ என்ற உண்மையை உணர்ந்த அமெரிக்கர்கள், விளையாட்டிற்கு முதன்மையான இடம் அளித்தனர்.

விளையாட்டைப் பல வழிகளிலிருந்தும் பெற்றுப் பயன் பெற விழைந்தனர். வாழ்க்கை வளமுள்ளதாக இருக்கச் செல்வம் மட்டும் போதாது. உடல் கல்லாகவும், உள்ளம்

மலராகவும் இருக்க உடற்பயிற்சியே துணை’ என்று