பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

விளையாட்டை ஏற்றினர். போற்றினர். விளையாட்டுத்துறை எனும் வானிலே, புதிய புதிய விளையாட்டு விண்மீன்கள்

தோன்றி பயன் எனும் ஒளி வீசித் திகழ்ந்தன.

அவைகளிலே விடிவெள்ளி போன்று விளங்குவதுதான் கைப்பந்தாட்டமாகும். பலனும் பயனும் தம்மைப் பின் தொடருவோருக்கு என்றும் கிட்ட வேண்டும் என்பதே ஆட்டங்களின் தலையாய நோக்கம். இந்த அடிப்படையில் தான் கைப்பந்தாட்டம் தன்கடமையாற்ற அமெரிக்காவிலே

தோன்றியது.

செல்வத்திலே புரளுகின்ற மக்களுக்கு உள்ளம் மென்மையாக இருக்கிறதோ என்னவோ, உடல் மென்மையாகத்தான் இருக்கும். அவர்கள் கடுமை நிறைந்த உழைப்பைக் கண்ணெடுத்தும் பாரார். கனவில் கண்டாலும் உடனே விழித்துக் கொள்வார். ஏழைநாட்டுச் செல்வர்களே இப்படியென்றால், செல்வம் கொழிக்கும் சீமையில் வாழும் செல்வர்களைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதேயில்லை.

ஏதோ பொழுதைக் கழிக்க வேண்டுமேயென்று உடற் பயிற்சி உள்ளுறை கூடத்திற்கு (Gymnasium) வந்து போகலாமே என்று வருபவர்கள்; அவ்வாறு சிந்தையில் தோன்றிவிட்ட எண்ணத்தை ஏமாற்றக் கூடாது என்ற பெருந்தன்மையுள்ளத்தோடு வருகை தருபவர்கள்; விட்ட குறை தொட்ட குறைபோல, விளையாடிைலே தன்னை அறியாமல் ஒரு உற்சாகம் சிளம்பி விடவே, ஆட்டத்தை ஆடவேண்டும் என்ற விருப்பத்தால் வரத்தொடங்கி யவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தனர்.

‘விளையாட்டினுல் உற்சாகம் வரவேண்டும். ஆனல் அதிக உழைப்பும் களேப்பும் நமக்கு வரக்கூடாது. அதுதான் நமக்கு அன்றைய முக்கியத் தேவை” என்று பேசி, முடிவும் கட்டி விட்டனர். இதை அறிந்தார் ஒருவர். தன்னுடைய