பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

மாட்டிக் கொண்டு சிறிய ரப்பர் பந்தை வைத்து ஆடப்படு கின்ற ஆட்டம்) போதுமென்ற நிலைக்கு வர ஆரம்பித்தனர்.

மேற்கூறிய இரண்டு விளையாட்டுக்களே இல்லக ஆட்டங்களாக (Indoor Games) அதிகமான இடங்களில் ஆடப்பட்டு வந்தன. இந்த விளையாட்டுக்களோடு தானும் சேர்ந்து கொள்ளலாம் என்று வந்த கைப்பந்தாட்டத்திற்கு, கவனிப்பாரற்று போகக்கூடிய மக்கள் கூட்டமே எதிரே நின்றது. சூழ்நிலை இதற்கு வளம் தருவதாக அமையவில்லை.

‘பெரியவர்களுக்குப் பிறந்த இடத்தில் மதிப்பில்லை, பெருமையில்லை’ என்பார்கள். உண்மைதான். பெருமைமிக்கக் கைப் பந்தாட்டத்தைப் போற்றுவாரும் பின்பற்றுவாரும் குறைந்தனர். போற்றுவாரிடத்தையே புகலிடமாகக் கொண்டு இந்த ஆட்டம் பிறந்தகத்தை விட்டு வேறிடம் சென்றது.

தான் பிறந்த மசாசியூசெட்ஸ்’ என்னும் (Massa Cheusetts) [535.g # 6056?l G), 6iv stiftil ?v@ (Springfield), எனும் நகரை நோக்கிக் குடிபெயர்ந்து தஞ்சமடைந்தது.

புதுமை நிரம்பிய இந்தப் புது விளையாட்டிற்கு வந்த வரவேற்பானக பதிய பெயரோடும், புதிய நிலையோடும் வந்தது. டாக்டர் ஏ. டி. கால்ஸ்டெட் (Dr. A. T. Halstead of Springfield)என்பவர், இதன் அருமையைக்கண்டு மிகவும் விரும்பினர். மின்டானெட் என்ற பழம் பெயரை மாற்றி: (Volley ball) (மாறிமாறி அடித்தல்) என்ற பெயரைச் குட்டினர்.

பெயர் மாறிய வேளையோ என்னவோ, இதன் பிற்காலம் பொற்காலமாக மாறத் தொடங்கியது, ஆதரவாளர்கள் பெருகினர். ஆட்டம் வளர்ந்தது ஆல் போல. இந்தியாவில் பிறந்த புத்தமதம், வெளிநாடுகளில் பெருமையுடன்