பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 115

திட்டங்கள் வகுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன. இதை நல்ல முறையில் நிறைவேற்றி, வெற்றிகரமாக அமைக்கும் பொறுப்பை பிரெஞ்சு நாட்டிடம் குழு ஒப்படைத்தது.

பிரெஞ்சு நாட்டின் பெருந்தன்மையான பொதுப்பணி ஆரம்பமானது. பல நாடுகளுக்கும் அழைப்புக்கள் விடுக்கப் பட்டன. இறுதியாக பெல்சியம், (Belgium) ஹங்கேரி, ஹாலந்து, இத்தாலி,எகிப்து,ருமேனியா, உருகவே(Uruguay) அமெரிக்கா, போன்ற 14 நாட்டின் பிரதிநிதிகள் பாரிசில் கூடி ஆக்க வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

பதினன்கு நாடுகளைக் கொண்டு தொடங்கிய கழகம், இன்று 70க்கு மேற்பட்ட நாடுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இன்று இந்த ஆட்டம் உலகெங்கிலும் ஆடப் படுகிறது. இத்தகைய நிலையை பெற்ற கைப்பந்தாட்டத்தின் தலைமைக்கழகத்தின் பெயர், அகில உலகக் கைப்பந்தாட்டச் Gii Gub” egy Gub . (International volley ball federation), இந்தத் தலைமை சங்கத்தின் முதல் தலைவராக இருந்து பணியாற்றியவர் பிரெஞ்சுநாட்டைச் சேர்ந்த பால் லிபாடு” (Paul Libaud) என்பவர். தலைமைக் கழகமும் பாரிசில்தான் அமைந்திருந்தது.

“அகில உலகக் கைப்பந்தாட்டப் போட்டி (world volley ball championship) (1p36r (lp 36vir, *,?GJJ,"(Prague) GTGrp இடத்தில் 1949 ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 குழுவிற்கு மேல் பங்கெடுத்துக் கொண்ட அந்த போட்டியில், ரஷ்யா (Russia)வென்றது.செக்கோசுலோவோகியா தொடர்ந்தது, (Runners-up).

1952ஆம் ஆண்டு மாஸ்கோவில் (Mascow) நடந்த இரண்டாம் அகில உலகக் கைப்பந்தாட்டப் போட்டி நடந்ததில், ரஷ்யாவே மீண்டும் வென்றது.