பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

1954ஆம் ஆண்டு மூன்றாவது உலகப் போட்டியில் ரஷ்யா தன்னுடைய முதல் இடத்தை இழந்தது. செக்கோசு லேவோகியா வென்றது. இவ்வாறு உலக அளவிலே,உன்னத மான இடத்தை எய்திய கைப்பந்தாட்டத்தை, ஒலிம்பிக் ஆட்டங்களுள் ஒன்றாக ஆக்கிவிட, அகில உல ஒலிம்பிக் @08IT u ITL - @ @5(1p” (International Olympic Committee) 1955ஆம் ஆண்டு முயன்றது.

ஆனல், 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் (Tokyo) நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களுள் ஒன்றாக இணைக்கப் பெற்று, இணையிலா நற்பெருமையைப் பெற்றது. ஈடிலா வளர்ச்சியையும் எய்தியது.

இந்தியாவில் கைப்பந்தாட்டம்

அமெரிக்காவிலேயே ஆடப்பட்டு வந்த இந்த ஆட்டம், முதன் முதலாக 1900 ம் ஆண்டில் கனடா நாட்டை நோக்கி நடை பயின்றது. பின் கியூபாவைத் தன்னுடைய இரண் டாவது களமாகக் கொண்டு வளர்ந்தது. பின்னர் நகரங் தோறும், நாடுகள் தோறும் தனக்காக ஆடுவோரையும், அனுதாபிகளையும் வளர்த்துக் கொண்டு பெருகிக்கொண்டது இவ்வாறு உலகை வளைய வந்த ஆட்டம், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியாவிற்கு வருகை தந்தது. இதன் வருகைக்கு மூல காரணமாக இருந்தவர்கள் “இளங் கிறித்துவ சங்கத்தினர் தான் என்பது நமக்குச் சொல்லாமலே விளங்கும்.

அமெரிக்காவை விட்டு அயல் நாடு சென்ற, இந்தச் சங்கத்தின் அங்கத்தினர்கள், தங்கள் கூடவே கைப் பந்தாட்ட விளையாட்டையும் எடுத்துச் சென்றனர். அடுத்துச் செய்யவேண்டிய ஆக்க வேலைகளைத் தொடுத்து