பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 117

முடித்து, மக்களை பயன் பெறுமாறு செய்தனர். இதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக நின்று பணியாற்றிய பெருமை ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரியையே (Y. M. C. A. College of Physical Education, Madras) frt(5ub.

இக் கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவர் களுடனே சென்றக் கைப்பந்தாட்டம், வெகு விரைவிலே பாரதம் முழுதும் பரவியது. பள்ளிகளிலும், பொது ஆடு களங்களிலும், ரயில்வே ஊழியர்களின் சங்கங்களிலும், வணிகத்துறை குழுக்களிலும் ஒரு முக்கியமான ஆட்டமாகக் கைப்பந்தாட்டம் மாறி நின்றது. பள்ளிகளிடையேயும், கல்லூரிகளிடையேயும் போட்டிகள் நடை பெற்றதோடு, மாவட்டங்களிடையேயும், மாநிலப் போட்டியாயும், எல்லா மாநிலங்களிடையேயும் நிகழ்கின்ற அகில இந்தியப் போட்டி யாகவும், மிக உற்சாகத்துடன் ஆட்டங்கள் நிதமும் நிகழ்ந் தேறின.

“அகில இந்தியக் கைப்பந்தாட்டக் கழகம்” (Volley ball Federation of India) 1950-ih goorG GT fl 1@,$5'i il l –g1. மாநிலங்களிடையே பல போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியா முதன் முதலாக ஆசியா வெற்றி நாடாக (Asian Champion) இந்த ஆட்டத்தில் வந்தது. தற்பொழுது, பயிற்சிக்காகப் பல நாடுகளிலும் பல போட்டி ஆட்டங்களை ஆடித் தனதுத் திறமையை இன்னும் விரிவு படுத்திக் கொள்ள இந்தியா முனைந்து வருகிறது. வெற்றியின்படி விடாமுயற்சியின் பிடியிலே அடங்கிக் கிடக்கிறது. என்பதை நாம் உணர்ந்திருக்கிருேம். அதேைலயே ஆடுவோருக்கு உற்சாகமளிக்கவும், வாய்ப்பும், வசதியும் தந்திடவும் பாரதம் முன்னுக்கு வந்திருக்கிறது. காலம் ஒரு நாள் மாறும். நம் கனவும் நிறைவேறும் என்று எண்ணி முயற்சி யில் இன்னும் ஊக்கம் வைத்து, பயிற்சியும் பெற்றுப் பலனை

அடைவோமாக!