பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

விதிகளில் மாற்றமும் செழுமையும்

விதிகளின் கீழ் நின்று ஆடி வெற்றி பெறுவதே ஆட்டத்தின் முக்கிய நோக்கம். ஆட்டத்தின் விரைவுக்கும், வேகத்திற்கும், சீர்மைக்கும், செழிப்புக்கும், நுண்மைப் பயிற்சிக்கும் நூதன ஆட்டத்திற்கும் இசைவு தருவதற்காக ஆட்ட விதிகள் அவ்வப்போது பொருந்தும் நிலையில் திருத்தி

அமைக்கப்படுகின்றன. ஆட்டத்தின் தொடக்க கால நிலைக்கும், தேர்ச்சியுற்று புதுபுது முறைகளில் ஆடுகின்ற இன்றைக்கும், ஏறக்குறைய எல்லா முறைகளிலுமே

மாற்றங்கள் நிகழ்ந்துதான் இருக்கின்றன.

விதிகளின் மாற்றம் ஆட்டத்தின் செழுமைக்காகவும், ஆடுவோரின் நலனுக்காகவும்தான் அடிக்கடி ஏற்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு பழையவிதிகள் எவ்வாறு மாறி வந்திருக்கின்றன என்பதைக் காணும்பொழுது, ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் நமக்கு நன்கு

‘oll i)3,676?” (Physical Education) argr p 35%UL'il sl or வெளிவந்து கொண்டிருந்த செய்தி வெளியீட்டுத் தாள் ‘ஒன்றில், கைப்பந்தாட்டத்தைப் பற்றிய முதல் கட்டுரை 1896 ம் ஆண்டு சூலைத்திங்களன்று வெளிவந்தது. அப்பொழுது இருந்த விதிமுறைகளைக் காணும்போது நமக்கு இப்பொழுதும் வேடிக்கையாகவே தோன்றுகிறது.

விளையாடும் இடத்தின் எல்லை 25x1501-). வலையின் அகலம் 2 அடி. நீளம் 27 அடி. ஆட வேண்டிய வலையின் உயரம் (Height of the net) 6 அடி. இவ்வளவு குறுகிய பரப்பளவு உள்ள ஆடுகளத்தில், ஒரு குழுவிற்கு 20 அல்லது 30 பேர்கள் நின்று ஆடினர்கள் என்றால் அவர்களின் ஆர்வம் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்?