பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 121

1921ஆம் ஆண்டுக்கு முன், ஆடுகளத்தின் பரப்பு, 60 அடி நீளமும் 35 அடி அகலமும் கொண்ட நீண்ட சதுரமாக

விளங்கியது. அதன் நடுவிலே வலை கட்டப்பட்டு, ஆடுகளத்தை இரண்டாகப் பிரித்தது. இந்த ஆண்டில்,

60

IT is

நடுவிலே நடுக்கோடு (Centre ine) ஒன்றும் புதிதாக இணைக்கப்பட்டது.

1922ஆம் ஆண்டு விதிகளில் இன்னும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டன. ஒரு குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் எத்தனை முறையேனும் பந்தைத் தொட்டு ஆடி வலைக்கு மறுபுறம் அனுப்பலாம் என்ற விதி மாறி, மூன்று முறை தான் தொட்டு ஆடிப் பந்தை வலேயைத் தாண்டி மறு பகுதிக்குள் அனுப்பிவிட வேண்டும் என்றும்; ஆடுகளத்தில் உள்ள ஒரு மூவரில், யாராவது ஒருவர் தாக்கும் கோட் டிற்கு (Attack Line) உட்புற பகுதியில் முன்னே வந்து (அதாவது நடுக் கோட்டிற்கும் இடையில் உள்ள தாக்கும் கோட்டின் முன்புறமும், ஆடுகளப் படத்தைக் காண்க.) வலைக்கு மேலே பந்தை அடித்தல் கூடாது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதல்ை விளையாட்டில் கட்டுப்பாடு அதிகமாக ஏற்பட்டது.

1923ஆம் ஆண்டு ஆடுகளத்தின் அளவு 25 x 60 லிருந்து ஆகக் குறைந்தது. 30 X 60 ஆட்டத்தை வெல்லுவதற்குரிய ‘வெற்றி எண்கள் 15லிருந்து ஒரு நூதன மாற்றத்தைப் பெற்றது. ஒரு குழு 14வது வெற்றி எண்ணை ஆடி வென்று விட்டால், அக் குழுவே வென்றதாகும். ஆனல், இரண்டு குழுக்களும் சேர்ந்தாற்போல, ‘Logjr’ (Fourteen All)

வி. வ. வ.-8