பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 123

வேகமாக அடிக்கும் பந்தை (Spiked Ball), எடுக்கின்ற மறு குழுவில் உள்ள ஒருவர், உடல்மேல் ஒருமுறைக்கு மேலே பந்து படுவதை அனுமதிக்கலாம். (Multiple Contact). அதாவது பந்தை எடுக்கும்பொழுது ஒரே சமயத்தில் கைகளிலும்,

உடம்பிலும் படலாம்.

1938ஆம் ஆண்டு ஆட்டத்தில் மிகுந்த திறமைகள் ஏற்பட வழிவகுத்தது. ஒரு குழுவில் ஆடிப்பவர் (Spiker) வலைக்கு மேலே எகிறிப் பந்தை அடிக்கும்பொழுது, மறு குழுவில் முன் வரிசையில் உள்ள மூவரில், இருவர் மட்டும் கைகளை உயர்த்தி வலைக்கு அப்புறம் கைகள் போகா மலும், வலையைத் தொடமலும் வைத்து, அவர் பந்தை அடிக்க முடியாதவாறு தடுக்கலாம் (Blocking) என்ற விதி பிறந்தது.

19416) QGli17s)65GLD) (Above the Belt) Lisgs உடம்பில் எங்கு பட்டாலும் சரியானது என்ற விதி மாறி, முழங்கால்களுக்கு மேல் உடம்பில் எங்கு பட்டாலும் சரி என்ற ஒரு விதி கொண்டு வரப்பட்டது. இப்பொழுது இடுப்பிற்குக் கீழ், பந்து பட்டால் அது தவருகும்.

இவ்வாருக, கால மாற்றத்திற்கும், ஆட்டத்தில் திறமை களின் ஏற்றத்திற்கும், ஆடுவோர் நலனின் ஊட்டத்திற்கும் உதவிட, விதிகள் மாறி மாறி வந்து வளம் செய்தன. இன்னும் விதிகள் மாற்றப்படலாம். ஏனெனில், உலக நாடு களின் ஆட்டத்திறன் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. பழையன கழிதலும், புதியனபுகுதலும் இயற்கை என்றாலும், இந்த ஆட்டம் நீடு வாழும். வளமை நிறைவுற சூழும். இதன் வழியே இன்பச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு தானிருக்கும்.