பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பற்றிய குறிப்புக்கள் பல இடங்களில் காணக் கிடக்கின்றன. ரோமானியர்கள் ஆடி வந்த விளையாட்டில்-பந்து காற்றடிக் கப்பட்டு, உருவத்தில் பெரியதாக இருந்தது. இதைக் கைப்பந்து’ (Hand ball) என்பாரும் உண்டு. ஏனெனில். 16, 17-ம் நூற்றாண்டுகளில் பழக்கத்தில் இருந்த பலூன் பந்து’ (Baloon ball) என்ற ஆட்டத்தைப் போலவே இது இருந்தது.பலூன் பந்தும் காற்றடிக்கப்பட்டு இருந்தது. பந்தை உயரத்திலே இருத்தி, முடியும் வரை மேலேயேத் தட்டிக் கொண்டிருப்பதே ஆட்டத்தின் முக்கிய நோக்கம். இதுதான் கால அளவிலே கால் பந்தாக மாறி வந்திருக் கிறது என்று நம்பப்படுகிறது.

இந்தச் சான்றுகளுக்கும் மறுப்புரைக்கப்படுகின்றது. ‘இவ்வளவு பெரும்பான்மையாக கிரேக்கர்கள் ஆடி வந்த ஆட்டம், ஏன் கிரேக்க நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்” (Olympic games) பட்டியலிலே இடம் பெறவில்லை’? எங்கும் இதைப் பற்றி ஒரு வரி கூட குறிப்பிடப்படவில்லை’? என்று ஒரு வினுவை சரித்திர ஆசிரியர் ஒருவர் எழுப்புகின்றார். கேள்விக்குரிய தகுந்த பதில் கிடைக்கவில்லை. ஆகவே நாம் அடுத்த நாட்டைக் காண்போம்.

‘சீனவில்தான் (China) கால் பந்தாட்டம் பிறந்தது. பண்டைய சீனர்கள் (inhabitance) தான் இதை முதன் முதலில் ஆடி வந்தனர். அவர்கள் ஆடிய பந்து, தோலிலே கிழிக்கப்பட்ட எட்டுத்துண்டுகளால் உருவாக்கப்பட்டு, அதிலே மயிர் திணிக்கப்பட்டிருந்தது”. ஆகவே சீனுவில்தான் கால் பந்தாட்டம் பழமை காலந்தொட்டு இருந்தது எனக் கொள்ளலாம்’ என்று பேராசிரியர் ஜில்ஸ் (Professor Giles) என்பவர் உரிமை கொண்டாடுகின்றார் இந்தக் கருத்துக்கும் ஒரு மறுப்புரை இருக்கிறது.

சீனவிலே கால்பந்தாட்டம் எப்படித் தோன்றியது? எவ்வாறு மறைந்தது? என்று இவரால் சொல்லப்படவில்லை.