பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

வலைக்கு மேல் எழும்பிக் குதித்து இரு கைகளாலும் பந்தை வேகமாகத் தள்ளுதல் (Pushing);

3. வலையைத் தாண்டி மறுபுறம் கையை விட்டு,

பந்தை அடித்தல் (Crossing);

4. பந்தை அடித்து விட்டுக் கீழே குதிக்கும் பொழுது, வலையைத் தொட்டோ அல்லது இழுத்தோ விடுதல்; நடுக்கோட்டைக் கட்ந்து மறுபகுதியில் காலூன்றுதல்;

5. பின் வரிசையிலிருந்து முன் வரிசைக்கு வந்து அடிக்கவும், தடுக்கவும் பங்கு பெறுதல் எல்லாம் தவருகும்.

அடிப்பதைத் தடுக்கும் பொழுது

கைகளை உள்ளே விட்டுப் பந்தை அடிப்பதைத் தடுப்பதும், தடுக்கும் பொழுது வலையைத் தொடுவதும், நடுக்கோட்டைத் தொட்டு மறு பகுதியை மிதிப்பதும், தடுக்கும் விதியை மீறுவதாகும்.

தண்டனை : இவ்விதத் தவறுகளுக்கு, பந்து எதிர்க் குழுவினருக்குப் போய்ச் சேரும். இவ்விதத் தவறுகள் ஆட்ட நேரத்தில் சாதாரணமாக நிகழக்கூடியவைகளே. ஆனல், இவைகளைத் தவிர்த்து ஆடினல் வெற்றி நல்ல முறையில் அமைந்துவிடும்.

4. ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள்

1. ஆட்டத்தின் விதிகளுக்கு அடங்கி நடக்காதிருத்தல்.

2. நடுவர்களை மதிக்காமல் முரண்பட்டுப் பேசுதல்,

நடத்தல்.