பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டாமல் இருக்க வேண்டும் என்பதே விளையாட்டின் நோக்கம். நல்ல பண்பாட்டினை வளர்க்க உழைப்பதுவே ஆட்டத்தின் நோக்கம். நோக்கம் வெற்றி பெற, ஆடுவோர் முயல வேண்டும். முயன்றால் முடியாதது உண்டோ!

திறன் நுணுக்கங்கள் (Techniques)

ஒவ்வொரு ஆட்டத்திலும் உள்ள சிறந்த திறன் நுணுக் கங்களைக் கற்றுத் தெளிந்து, அதன்வழி ஆடினுல்தான், நாம் ஆடப் புகுந்த நோக்கம் நிறைவேறும். அடிப்படைத் திறன்களை நாம் அறியாமலும், அறிந்த பிறகு ஆடத் தெரியாமலும் இருந்தால், ஆடுகின்ற நமக்கும், நம்முடன் சேர்ந்து ஆடுகின்ற குழுவினருக்கும் வருத்தமும் துயரமும் ஏற்படுவது இயல்பே.

கைப்பந்தாட்டத்தில் காணுகின்ற திறன் நுணுக்கங்கள் எல்லாம், பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எளிதாகவே இருக்கும். ஆனால், ஆடும் பொழுது பயிற்சி குறைந்திருக்கும் காரணத்தால், விரல்களுக்கு வலியும், வேதனையும், சில நேரங்களில் விரல்களில் சுளுக்குக்கூட வந்துவிடும். வருவதும் இயற்கையே. இந்த வேதனையைத் தவிர்க்க, பந்தை எடுக்கும் முறை, அடிக்கும் முறை, முதலியவற்றை அறிந்து, புரிந்துகொண்டு ஆட வருவது சிறப்பாகும்.

ஏனெனில், ஆட்டத்தின் நோக்கமே இதுதான். முதலில், ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட, அந்த ஆட்டத்தைச் சிறப்பாக ஆடுவதைவிட, அந்த ஆட்டத்தை மனமார விரும்புவதே சிறப்புடையதாகும். அதுவே கடமையுமாகும். ஆட்டத்தை விரும்பிய உள்ளம், ஆட்ட நுண் திறன்களைக் கற்றுக் கொள்கின்ற வழிகளில் இரண்டறக் கலந்து விடுகிறது. கற்றுத் தெளிந்துப் பழகி விட்டால் பின் ஆட்டம் சிறக்காதோ?