பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 1 3

ஆகவே, ஆடுவதற்கு முன், ஆட்டத்தை உண்மையோடு விரும்பி, உளமாரக் கலந்து அதில் பற்றும் பாசமும் வைத்து ஆட முயல வேண்டும். ‘வெற்றி நமக்கு முக்கியமல்ல. விளையாட்டிலே பெறும் இன்பம், மன அமைதி, மற்றும் தோழமைதான் முக்கியம்’ என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும். புகழும் பெயரும் நாம் வலிய தேடி முயல்வதால் மட்டும் வந்துவிடாது.

ஆட்டத்தில் நாம் காட்டுகின்ற ஆர்வம், விதிகளுக்கு அடங்கியக் கட்டுப்பாடு, எதிர்க் குழுவினருடன் நாம் நடந்து கொள்கின்ற பெருந்தன்மையரீன அன்பும் பரிவும், தோழமை உணர்ச்சியும்தான் பெருமையைத் தேடித் தரும். இவைகளால் ஆட்டத்திலும் வெற்றி காணலாம். ஆட்டம் காண வந்த மக்கள் கூட்டத்திலும் வெற்றி காணலாம். அதல்ைதான் ஆட்ட வல்லுநர்கள் விளையாட்டில் பற்று வை (Love the Game) என்று அடிக்கடி கூறுகின்றார்கள். இனி ஒரு சில திறன் நுணுக்கங்களைக் காண்போம்.

usiongj, 65.5uissemb355) (Handling the Ball)

கைப் பந்தாட்டத்தின் அடிப்படைத் திறன் நுணுக்கமே பந்தைத் தொட்டு விளையாடுகின்ற முறை தான். பந்துக்கும் விரல்களுக்கும் கைகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதன் காரணத்தால் தான் பந்தைக் கையாளுதல்’ எவ்வாறு

என்ற தலைப்பு இங்கு சேர்க்கப்பட்டிருக்கிறது.

பந்தைக் கையாளுதல் என்றால் விரல்களால் பந்தைத் தள்ளி விளையாடுதல் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். அடிப்படையில்லாத கட்டிடம் ஆட்டம் கொடுத்து விடும் என்பார்கள். அது போல, அடிப்படை யாக உள்ள பந்தைக் கையாளும் முறையைக் குறைவறக்

கற்றுத் தேருவிடில், சிறப்பாக ஆட முடியாது.