பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

விரல்களால் பந்தை எதிர் நோக்கித் தள்ளும் பொழுது, விரல்கள் மட்டும் பயன்பட்டு ஒத்துழைப்பதில்லை. விரல்கள் விரிந்து, குவிந்து கோப்பை (cup) போன்ற வடிவத்தில் இருக்க, முன் கைகள் சிறிது பின் தங்கி வளைவது போல் வளைந்திருக்க, முழங்கால்களும் (Knees) சிறிது வளைந்திருக்க, விழிகள் பந்தை நோக்கியே பார்த்திருக்க, இவ்வாறு

உடல் முழுமையும் ஒன்று பட்டு இணைந்து (Co-ordination) செயல் படுகின்ற நிலைமையை நாம் காண முடிகின்றது. ஆகவே கைகளுடன் உடல் முழுமையும் சேர்ந்து ஒன்று படும்’ (Co-ordination) தன்மையை நாம் பெறுவதற்கு அதிகப் பயிற்சி பெற வேண்டும்; உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ!

விரல்களாலேயே பந்தை எடுக்கிருேம். இதைப் பந்தை gro 3, 55 (Finguring the Ball) grorGolb. Qail outroy எடுத்த பந்தைத் தன் குழுவினரிடம் கொடுப்பதைக் கொடுத்தல்’ (Passing the Ball) என்கிருேம். கொடுத்ததை பெற்றுக் கொண்ட மற்ற ஆட்டக்காரர், தன் குழுவில் அடிப்பவரிடம் (Spiker) தருவதற்காகப் பந்தை உயர்த்தித் தருவதை அமைத்தல்’ (Set-up) என்கிருேம். ஆக மூன்று முறை பந்தைத் தொட்டு ஆடக் கூடிய வாய்ப்பைப்