பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 135.”

பயன்படுத்தி, எடுத்துக் கொடுத்து, அமைத்து, அடிக்கச் செய்யும் ஆட்டமே சிறந்த ஆட்டமாகும்.

பந்தை எடுக்கும் பொழுது விரல்களிலுள்ள சதைப் பாகத்தில்ை எடுத்துத் தள்ளியே ஆட வேண்டும். உள்ளங் கையால் பந்தை எடுத்து ஆடி ல்ை, பந்து நம்முடைய கட்டுப்பாட்டுக்கு கீழ் வராது. இன்னும் ஆட்ட விதிகளின் படி, பந்து அந்த இடத்தில் பட்டால் தேங்கிடும் (Best) ஒரு வித ஒலியும் கிளம்புவதால், அது தவறென்றே கருதப்படும். கைகளின் அடிப்பாகத்தில் (Heel of the hand) பந்தைக் குத்தினுல் நாம் நினைக்கின்ற இடத்திற்குப் பந்தை அனுப்ப முடியாது. எனவே, எல்லாவிதமான நன்மைகளையும் அளித்து, ஆட்டத்தை அழகு படுத்துவது, விரல்களின் சதைப்பாகத்தால் பந்தை எடுத்து ஆடுவதே

Lsjb5n5 SIG55TGD (Ips om (Finguring the ball)

மேலே சொன்ன முறைப்படி, பந்தை விரல்களினுல் தான் தள்ளி ஆட வேண்டும். விரல்களினல் எடுத்து ஆடும். பொழுது நாமே திருப்தியுற்ற ஒரு நல்ல உணர்ச்சியைப் பெறுகின்றாேம். ஆட்ட நேரத்தில் விரல்களினல் எளிதாகவே பந்தை எடுத்துத் தள்ளி ஆடக்கூடிய நிலைமை எப் பொழுதேனும் ஒரு சில சமயங்களில்தான் வரும். பந்து உயரமாகவும் வரும்; தாழ்வாகவும் வரும். இந்த நேரங்களில் எப்படி எப்படிக் கைகளைப் பயன்படுத்தி ஆட வேண்டும் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயரமாக வரும் பந்து (High Ball) என்றால், சாதாரண மாக நமது மார்பளவுக்கு மேலாக வரக் கூடியதாகும். இவ்வாறு வரக்கூடிய உயரமான பந்தை, மெதுவாக, அவசரமின்றி, நமது வசதி போல் இருந்து எடுத்து விளையாடலாம். ‘கைகளிரண்டையும் முன்னே நீட்டி முழங்,