பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கைகளைச் சிறிது மடக்கினற் போல் வைத்து, இடது காலைச் செளகரியப்படி ஒரு தப்படி முன்னே இருத்தி, பத்து விரல் களிலும் பட்டுக்கிளம்புமாறு விறைப்பாகக் கைகளைவைத்து, மார்புக்கு மேலேயே முன் தள்ளி ஆட வேண்டும்.’ இவ்வாறு பந்தை எடுப்பது எளிது. நாம் பந்தை எடுத்துத் தள்ளி ஆடுவதற்கு நேரமும் வசதியும் நிறையக் கிடைக்கும்.

“கீழ்ாக வரும் பந்து’ (Low ball) என்றதும் தரையோடு தரையாக வரும் பந்து என்று பொருள் அல்ல. எளிதாக,

செளகரியமாக எடுக்கக் கூடிய மார்பளவு உயரத்திலிருந்து,

கொஞ்சம் கீழே இடுப்பளவு, அதற்குக் கீழே தாழ்ந்து வருவதையே கீழாக வரும் பந்து என்கிருேம்.

முன்பு கூறிய நிலை போல, இந்தப் பந்தை எடுக்க முடியாது. வேறு முறையில்தான் எடுக்க வேண்டும். கீழாக வரக்கூடியப் பந்தைக் குனிந்து தரையில் முழங்கால்களை மடித்தபடி (கைகளை முன்பு சொன்ன முறைப்படி) எடுக்கலாம். இன்னும் கீழாக வரும் பந்தை உள்ளங்கைக்கு மேற்புறத்தில் உள்ள மேடான பாகத்தில் (ஏந்துவது போல)