பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 5 LI பந்த Tடட ம 137.

அடிக்கலாம். பந்துக்கும் கீழாக விரல்களைக் கொண்டு. சென்று, மேலே பந்தைத் தூக்கித் (lifting Motion) தள்ளுவது கடினம். அப்படித் தள்ளிலுைம், கையில் பந்து தேக்கமுற்றது (Rest) என்ற தவறுக்கு ஆளாக நேரிடும்.

இன்னும் இந்த முறையில், நாம் நினைத்த இடத்திற்குக் குறிப்பாகவும் சரியாகவும் பந்தை அனுப்ப முடியாது. ஆகவே, கீழாக வரும் பந்தை, முடிந்த வரை மண்டியிடும் நிலையிலாவது, தரையில் மண்டியிட்டாவது, அதுவும் முடியாமற் போனல், கையைத் தாழ்த்திக் கீழிருந்து மேல் நோக்கி அடிக்கும் முறையிலாவது (under hand pass)

குறிப்பு : இப்பொழுதெல்லாம் விரல்களில் பந்தை விளையாடாமல், இருகைகளிலும், அதாவது முழங்கையி லிருந்து மணிக்கட்டுப் பகுதிக்கும் இடைபட்ட பகுதிகளில் தான் பந்தெடுத்து ஆடுகின்றனர்.

பந்தைக் கொடுக்கும் (Upon (Passing the Ball)

பந்தைக் கொடுத்து ஆடுகின்ற ஆட்டத் திறமையே ஆட்டத்தின் முக்கியத் திறமையாகும். அடித்தெறிவதி லிருந்து வருகின்ற பந்தை எடுத்து முன் வரிசையில் இருக்கும் ‘அமைப்பாளருக்கு'க் (Lifter or Booster) கொடுக்கும் நிலையைத்தான் கொடுத்து ஆடுதல்’ என்கிருேம். இவ்வாறு கொடுத்து ஆடுவதற்காகவே, ஒரு குழுவினர் பந்தை வலைக்கு அப்பால் அனுப்புவதற்கு முன்பு மூன்று முறைத் தொட்டு ஆடலாம் என்ற விதி இணைக்கப்பட்டிருக்கிறது.

முதல் முறையாக எடுத்த பந்தை அடுத்துத் தொடர்பாகத் தொடுபவர் அமைப்பாளராகவே இருக்க வேண்டுவது மரபு. ஏனெனில், அமைப்பாளர் உயர்த்திக்

வி. வ. வ.-9