பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கொடுத்த பந்தை, மூன்றாவது தடவையாகத் தொட்டு ஆடுபவர் அடிப்பவராக”த் (Spiker) தான் இருக்கவேண்டும். இதே போல்தான் பொதுவாக ஆட வேண்டிய முறையில், சில நேரங்களில் இரண்டு தடவையாலும், ஒரு தடவை பாலும் பந்தை வலைக்கு அப்பால் அனுப்ப வேண்டிய சூழ் நிலை அமையும். இருந்தபோதிலும், கொடுத்து ஆடுகின்ற ஆட்டத்தில்தான் நிதானமும், அமைதியும், வெல்லுவதற் கேற்ற சூழ்நிலையும், அடித்து ஆடக்கூடிய வாய்ப்பு அதிக மாகவும் கிடைக்கும்.

கொடுத்தல்’ என்பதிலிருந்து, வருகின்ற பந் தினே எடுத்து, மற்றவருக்குக் கொடுத்தல் அல்லது வழங்குதல் (Supply) என்று நன்றாக அறிய முடிகிறது, இடுப்பளவுக்குக் கீழாக வரக் கூடிய பந்தை, சாதாரணமாக வரும் பந்தை எடுப்பது போல் திருப்திகரமாக எடுத்துக் கொடுத்து ஆடுவது இயலாததொன்று. பந்துக்குக் கீழ்ப்பாகத்தில் விரல்களைக் கொண்டு உயர்த்தி ஆட முயன்றாலும், தேக்க முற்றது’ என்ற தவறு உண்டாகும்.

இதுபோன்ற இக்கட்டான நிலையைத் தவிர்க்க, ஒருசில முறைகள் இன்று கையாளப்பட்டு வருகின்றன. இரண்டு கை விரல்களையும் மடக்கிக்கொண்டு, உள்ளங்கையின் அடிப் பாகத்திலும் (மணிக்கட்டை (Wrist) ஒட்டியவாறு இருக்கும் சதைப்பற்று மிகுந்த இடம்), முன் கைகளுக்கும் மூடிய விரல்களுக்கும் இடையிலுள்ள இடங்களிலும் பந்து விழுமாறு ஏந்தி எடுத்துத் தாங்கள் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

நேராக வரும் பந்தை மேற்சொன்ன முறையிலும் எடுக்கலாம். பக்கவாட்டில் பந்து சென்றாலும், இரு கைகளையும் பக்கவாட்டில் கொண்டு சென்று எடுக்கலாம். எட்டாத துரத்தில் பந்து சென்றாலும், முன்புறமாகக் கைக்கெட்டாது விழுந்தாலும், ஒரு கையை நீட்டி எடுக்க