பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 13.

அந்த விளையாட்டின் அடிச்சுவடே அந்த நாட்டில் இல்லாது ஒழிந்ததற்குக் காரணமும் இவரால் கூறப்படவில்லை. அந் நாட்டின் இலக்கியம், பண்பாடு, நுண்கலைகள் இவற்றில் எந்தவிதமான உருவகமும்; மற்றும் எழுத்துச்சான்றுகளிலும் இதைப்பற்றியே எழுதப்படவில்லை. தற்காலத்தவர்க்கும் இவ்வாட்டத்தில் போதிய ஆர்வமும் ஊக்கமும் இல்லை என்பதையும் நாம் காணுகின்றாேம்.

எனவே, மற்ற ஆசிரியர்கள் கூறுவது தவறென்றால் பேராசிரியர் ஜில்ஸ் மட்டும் கூறுவது எப்படி உண்மையாக இருக்க முடியும்” என்பதே அந்த மறுப்புரை ஆகும். ஆகவே, பண்டைய நாட்களில் இந்த ஆட்டம் பல நாடுகளில் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருந்தாலும், பிறந்தது எங்கு? என்பதுதான் சிக்கலில் முடிகின்றது. நம்பகமான ஆதாரங்களும் உண்டு என்று சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதையும் இங்கு காண்போம்.

பதினேரும் நூற்றாண்டில் (1016. 1042) இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த டென்மார்க்கு நாட்டினர் (Danes), ஆட்சி பொறுப்பை விட்டுவிட்டுத் தங்கள் தாயகத்திற்குச்

சென்றுவிட்டனர்.

ஒருநாள், பழைய போர்க்களப் பகுதியை வெட்டிச் சோதனை செய்து கொண்டிருந்த புதைபொருள் ஆராய்ச்சி வல்லுனர்கள்’ (Excavators) ஒரு மண்டை ஒட்டைக் காண்கின்றனர். அந்தத் தலை ஒரு டென்மார்க் நாட்டினன. தாகதான் இருக்க வேண்டும்’ என்று முடிவு கட்டுகின்றனர்.

டென்மார்க் மீதும் அந்நாட்டினர் மீதும் கொண்டுள்ள திரா வெறுப்பை வெளிப்படையாக காட்ட அம்மண்டை ஒட்டை அவர்கள் காலால் எத்தித் தள்ளுகின்றனர். இப்படி உதைத்து தங்கள் வெறுப்பைக் காட்டி மகிழும் நிகழ்ச்சியில் எல்லோரும் பங்கு கொள்ள நேர்ந்த பொழுது, முன்னும்