பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 139

லாம். முன்னல் பாய்ந்து சென்று முக்குளிப்பவர் (Diving) போன்று விழுந்து எடுக்க முயலலாம்.

இவ்வாறு எடுக்கப்படும் பந்து வலைக்கு மறுபுறம் போய்ச் சேரலாம். ஆனல் குறியாக செல்லுமா என்றால், அது அவரவர் பயிற்சியையும், பழக்கத்தையும் பொறுத்துத்தான் அமைகிறது. ஆகவே அடிக்கும் பந்தை எடுக்கவும், அடித் தெறிகிற பந்தை எடுக்கவும், கொடுக்கவும் நன்கு தன்னைத் தயார் செய்து கொள்வது ஆட்டக்காரர்களின் தலையாய

கடமையாகும்.

அமைத்தல் அல்லது உயர்த்தித் தருதல் (Set up or lift)

முதலாவதாக ஒருவர் எடுத்துக் கொடுத்த பந்தைத் தொடுகின்ற வாய்ப்பை, முறைப்படி (இரண்டாவது தடவை) பெறுகின்றவரே அமைப்பாளர் ஆவர். இக்கட்டான நேரங்களில் இவர், கைகளுக்குப் பந்து கிடைக்காமலேயே போகலாம். அதைப் பற்றிய பிரச்சினை இங்கு இல்லை, சாதாரண நிலையில் இவர் கைக்குத்தான் பந்து வந்து சேரும். அப்படி தரத்தான் எல்லோரும் விரும்புவர்.

மூன்றாவது தடவையில் அடித்து முடிக்கின்ற பணியாற்றும் அடிப்பவருக்கு’ (Spiker) அடிப்பதற்கேற்ற வாறு, பந்தை வலைக்கு மேலே, நன்றாக உயர்த்தித் தந்து அடிக்கின்ற வாய்ப்பையும் சூழ்நிலையையும் அமைத்துத் தருவதால்தான் அவரை ‘அமைப்பாளர்’ என்று அழைக்க வேண்டியதாயிற்றென்க.

பிறர் எடுத்துத் தருகிற பந்து சரியாக வந்தாலும், வராது போனலும், நல்ல முறையிலே, பந்தை அடித்து முடிப்பதற்கேற்றவாறு இயன்ற வரையில் பந்தை உயர்த்தித் தர முயல்வது இவரது பணியாகும். பந்திற்காக ஆடியும்,