பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அலைந்தும் பெற்று, பின் உயர்த்தும் நிலையில் ஒழுங்குபடுத்தித் தருகின்ற கடமையை ஆற்றித் தன் உதவியால், தன்குழுவை முன்னேற்றிச் செல்கின்ற வாய்ப்பையும், பெருமையையும் இவர் அடைகின்றார். அடிப்பவருக்கு ஏற்ற முறையில், “தடுப்பவர்கள்’ (Blockers) இல்லாத இடமாகப் பார்த்துத் தேவையான நிலைமையில் பந்தை உயர்த்தியும், தாழ்த்தியும் தருகின்ற கடமை அமைப்பாளரைச் சேர்ந்தது.

உயர்த்தித் தருவது என்றால் சாதாரணமாக உயரே பந்தை நேரே தள்ளி ஆடுவது போலத் (Chest Pass) தான். இங்கு அமைக்கும் முறையில் பந்தை விரல்களினல் தள்ளுவதில் மிகுந்த கட்டுப்பாடும் (Ball Control), மதி JBL Laplb (Presence of Mind) & To 6 spor (Foot work) விரல்களின் சிறந்த ஒத்துழைப்பும் அதிகமாகத் தேவைப் படுகின்றன. உயர்த்தி அடிப்பதற்கு ஏற்றவாறு பந்தினே அமைக்கும் முறையில் பல நிலைகள் உள்ளன.

வலைக்கு மேலே பந்தை உயரமாக நிறுத்திக் கொடுத்தல் (High Lift); வலைக்கு மேலே ஒரு அடி அல்லது அதற்கும் குறைவாக உயரம் இருக்கும்படி உயர்த்திக் கொடுத்தல் (Short Lift); வானவில்லைப் போன்று வளைவாக இருக்கும்படி வலையின் ஒரு கோடிக்குப் போகுமாறு பந்தை உயர்த்திக் கொடுத்தல் (ArchLift); வலையின் உயரத்திற்கு மேல் மூன்று நான்கு அடிகள் அப்பால் இருக்கும்படி உயரமாக பந்தை நிறுத்திக் கொடுத்தல் (Away Lift); பந்தை நேரே உயரமாக நிறுத்திக் கொடுத்தல (Vertical Lift).

இத்தனை அமைப்பு முறைகளிலும் நேரத்திற்கும் சூழ் நிலைக்கும் ஏற்றவாறு ஒரு முறையைக் கடைபிடித்து அமைப் பாளர் செய்ய வேண்டும். பந்தைக் கையாளுவதில் மிகமிகத் தேர்ச்சி பெற்றவரே இவ்வாறு உயர்த்தி அமைக்கும் பணியில் சிறப்பாக செய்ய முடியும்.