பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அடித்தெறிபவர் கடைக் கோட்டின் மேல் ஒற்றைக் காலில் நின்று கொள்ள வேண்டும். கையாலேயே பந்தைத் தட்ட வேண்டும். அவருக்கு இரண்டு முறை அடித்து எறியும் வாய்ப்பு உண்டு.

இப்பொழுது டென்னிஸ் பந்தாட்டத்திலுள்ள முறை போல, பந்து அடுத்த குழுவின் பகுதியில் விழுந்து விட்டால் ஒரு அடித்தெறியும் வாய்ப்பு போதுமானது; அல்லது அந்தப் பந்து வலையைத் தொட்டிருக்க வேண்டிய சூழ்நிலையில், பந்து வலையைத் தொடாதபடி அதே குழுவில் உள்ளவர்கள் அடுத்த பகுதிக்கு அனுப்பி வைத்தாலும் சரிதான்.

அப்படி அனுப்பிய பந்தானது ஆடுகளத்தினுள் விழாது, வெளியே சென்று விட்டால். இவருக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடையாது. ஆனல் காலம் மாற மாற, கைப் பந்தாட்டத்திலுள்ள திறன் நுணுக்கங்களும் சிறப்பான முறையில் வளரலாயின.

அதன் பயனுக எளிமையாயிருந்த போடுதலை’, இன்று வலிமையுடன் ஆட்டக்காரர்கள் அடித்தெறியும் நிலைக்கு மெருகேற்றிக் கொண்டது. எதிர்க் குழுவினர் ஆடுவதற் காகப் பந்தை அனுப்பி வைக்க மட்டுமே பயன்பட்ட ‘போடுதல்’, இன்று எவ்வளவு வேகமாக பந்தை அடித்து எறிந்து எதிர்க் குழுவினரைத் திணற வைக்க முடியுமோ, எவரிடம் போட்டால் பந்து திரும்பி வராதோ அவரிடம் எண்ணமிட்டுப் போட்டு, வலிமையுடன் ஆடி வெற்றி எண்களை பெறக்கூடிய அளவுக்கு நிலை வளர்ந்து இருக்கிறது.

எதிர்க் குழுவில் திறமையற்ற ஆட்டக்காரரிடமும், ஆள் இல்லாத இடம் பார்த்தும், மெதுவாகவும், வேக மாகவும் அடித்தெறிவதை இன்று எல்லா ஆட்டக்காரர்