பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பந்தை சுற்றி விடுவதும் (Over hand Spin), மிதக்கவிடுதலும் (Float) (அதாவது பந்து காற்றிலே மிதந்து வருவது போல) மெதுவாகத் தவழ்ந்து செல்லுமாறு அடித்தல் ஆகிய வேறு முறைகளையும் இன்று நடைமுறையில் கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய புதுமுறைகளைத் தவருமல் பயிற்சி செய்தா லொழிய, நன்கு இதில் தேர்ச்சி பெற முடியாது. இன்றைய

ஆட்டத்தில் பக்கவாட்டில் பந்தை அடித்தெறிவதும்தான் பெரும்பாலான ஆட்டக்காரர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், பந்தை வேகமாக அடிப்பதற்கும் அனுப்புதற்கும் ஏற்றவாறு இருப்பதே இதற்குத் தலையாய காரணமாகும்.

அடித்தாடுதல் (Spiking)

மூன்றாவது தடவையாக பந்தைத் தொடுபவராகவும், வலைக்கு மறுபுறம் பந்தை அனுப்புபவராகவும், பொதுவாக ஆட்டத்தில் விளங்குபவர் ‘அடிப்பவராகத்’ (Spiker) தான் இருக்க வேண்டும். பந்தை வேகமாகத் தாக்கி அடித்து, மறு