பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 145

குழுவினரை எடுக்க முடியாதபடி செய்து, தன் குழுவுக்கு வெற்றி எண்ணைத் தேடித் தருபவர் இவரே. சில நாடுகளில் பந்தை அடித்தல்’ (Spike) என்றும், மற்றும் சில நாடுகளில் ‘கொல்லுதல்’ (Kill) என்றும் கூறுகின்றார்கள். திறமையாக அடித்து ஆடும் ஆட்டக்காரர்கள் உள்ளகுழுவே ஆட்டத்தில் வெற்றி பெற முடியும்.

பந்தைத் தாக்கி அடிப்பவருக்குக் கால்களில் திறனும் (Leg Strength), உயரே எழும்பிக் குதிக்கின்ற தன்மையும் (Good Jump), G.sf.goldustar 56&rooj - (pub (Keen Vision)

நல்ல உடலுறுதியும் வலிமையும் (Good Physidue), பந்தைக் கட்டுப்படுத்தி அடிக்கும் ஆற்றலும் (Ball Control), பந்தின் போக்கைக் கண்காணித்து ஆடுகின்ற தெளிவும் (Adjustment), வலிமையாகப் பந்தை அடிக்கும் திறனும் (Ability to spike the ball), உடலும் உள்ளமும் ஒன்றுபட இயங்கும். உடலியக்கமும் உடையவரே அடித்து ஆடும் ஆட்டத்தில் சிறப்பு பெற முடியும்.

இன்னும் எதிர்க் குழுவினரின் ஆட்டத் திறமையையும், விளையாடும் முறையையும் கவனித்து அதற்கேற்றது போல,