பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 147

கைகளை வலைக்கு மறுபுறம் உயர்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு காலால் குதித்தும், ஓடிவந்து அடித்தும் இவற்றி எண்ணைப் பெற முயல்வது பயனில்லா முயற்சி யாகும். இதைத் தவிர்க்க, எப்பொழுது தாண்டி அடிக்க வேண்டுமோ, அப்பொழுதே நின்ற நிலையில் உயரே எழும்பிக் குதிக்கும் வல்லமை’ (Spring Action) வரவேண்டும்.

பந்தை எப்பொழுதுமே வேகமாக அடித்து ஆட முடியாது. அதற்குரிய வாய்ப்பும் கிடைக்காது. நல்ல முறையில் பந்து அடிக்கக் கிடைத்து, எதிர்க் குழுவினரின் தடுப்பு முறை (Block) இல்லாமலிருந்தால், பந்தை வேக மாக அடிக்கலாம். நல்ல முறையில் பந்து கிடைக்காத ‘முதும், தடுப்பு முறை இருக்கும் பொழுதும் வேகத்தை நீக்கி விட்டு, தடுப்பு முறையை ஒதுக்கி அடிக்க முயல G67@. “உயர்த்தி அமைக்கும் ஆட்டக்காரர் (Lifter) நலல முறையில் தராவிடில், அவர் மேல் ஆத்திரப்படாமல் பந்தை வலைக்கு மறுபுறம் (கடைக்கோட்டிற்கு அருகே யாவது) அனுப்ப முயற்சிக்க வேண்டும்.