பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

மேலே கூறி வந்தத் திறன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தால் தான் ஆட்டத்தில் சிறக்க முடியும். நன்றாகவும், சிறப்பாகவும் ஆடி விடலாம். ஆட்டத்தில் வெற்றி பெற்று விடலாம். ஆனல் ஆடுகின்ற ஆட்டத்தை உண்மையாக விரும்பி, மனமார நேசித்து ஆடுவது தாம் நம் கடமை ஆகும்.

‘ஆட்டங்களில் வெற்றி முக்கியமல்ல. பங்கு பெறுவதே முக்கியம். நன்றாக ஆடினுேம். இனி நன்றாகப் போட்டியிட்டும் திறமையுடன் ஆடுவோம்’ என்ற கொள்கையைக் கடைப் பிடித்து வந்தால், நம்முடைய ஆட்டத்தில் அதிகத் திறன்களையும், ஆடும் பொழுது பெருமையையும், அமைதியையும் என்றும் பெறலாம் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நல்ல ஆட்டக்காரரின் தலையாய பண்பாகும்.