பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றம்

வளைகோல் பந்தாட்டத்தின் அடிப்படைத் தோற்றமும் வரலாறும், மனித இனத்தின் வரலாற்றைப் போல மிகவும் பழமையானது. எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகளும், கற்பனை உருவங்களும், இதனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றன. என்றாலும், அறுதியான முடிவு எந்த நாட்டிற்கும், எந்த இனத்திற்கும்

போகவில்லை.

எங்களுடைய நாட்டிலே, இத்தகைய விளையாட்டு (Game) ஒன்று இருந்தது. இதன் விதிகள் இப்படிப் பட்டவை. இதற்கு இது தான் ஆதாரம்’ என்று ஏதேதோ சொல்வாருங் கூட, தெளிவான முறையிலே சான்றுகளைத் தர இயலாது. தடுமாற்றம் அடைகின்றனர். எனவேதான் வளைகோல் பத்தாட்டம்’ மனித இனம் தோன்றிய

வி. வ. வர-10