பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

என்றாலும், மக்கள் கூட்டம் பெருகி இந்த ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றார்கள்.

டப்ளின் (Dublin) எனும் இடத்தில் நடந்த அகில அயர்லாந்து கர்லி இறுதிப் போட்டி ஒன்றைக் காண 60,000க்கும் மேற்பட்டு 80,000க்கும் உட்பட்ட விளையாட்டு ரசிகப் பெருமக்கள் கூடிவந்து கண்டு களித்திருக்கின்றனர். எனவே இந்த கர்லி ஆட்டமே, வளைகோல் பந்தாட்டத்தின் மூலம் என்றும் அயர்லாந்தே இதன் தாயகம் என்றும் கூறிப் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர் ஒரு சிலர்.

பிரெஞ்சு நாட்டில் (France) 5 m gr வளைகோல் பந்தாட்டம் தோன்றியது என்றாலும், இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என்றும் ஒரு ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றார். தற்காலத்தில் இருக்கும் வளைகோல் பந்தாட்டத்தைப் போன்றும், பண்டைய கிரேக்கர்கள் ஆடிய ஆட்டம் போல் இல்லாமலும், சிறிது மாறுபட்டு உள்ளது என்று கூறுவாறும் உண்டு.

இதன் பெயர் சில நூற்றாண்டுகளுக்கு முன் காக்கெட் (Hoquet) என்று நிலவி வந்தது, பிரெஞ்சு மொழியில் காக்கெட் என்றால் இடையர்கள் தாங்குகின்ற கோல்’ என்று பொருள்.

இடையர்களை சங்கப் பாடல்கள் கோவலர்’ என்று அழைக்கிறது. கோவலர் என்ற பெயர் இடுகுறிப் பெயர் ஆகும். ஆடுமாடுகளைக் காப்பதற்கும், அபாயத்திலிருந்து தப்புவதற்கும், இன்னும் பல நிலைகளில் உதவக் கூடியத் தலைப்பாகத்தில் வளைவு உள்ளதான நீண்ட கோல்களே வைத்திருந்தார்கள். அந்தக் கோல்களின் பெயராலே அவர்களைக் கோவலன் என்று அழைத்தனர் மக்கள்.