பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 16

ஒலே இருந்ததால், நாடு காக்கும் பீடு கொண்டு பின்பற்றிப் பழகி வந்த விற் பயிற்சியை மறந்து விடலாயினர்.

இதைக் கண்ட ஆட்சியாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அதிர்ச்சி ஆத்திரமாகக் கிளம்பியது. ஆத்திரம் கடுமை மிகுந்த சட்டமாக உருவெடுத்தது. விளையாட்டில் ஈடுபடு பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சிறையிலிடப்படுவார்கள், அவர்களுக்கு விளையாட இடம் கொடுப்பவர்களும், உற்சாக மளிப்பவர்களும், மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படு வார்கள்’ என்று வந்தது ஒரு சட்டம். ஆட்டக்காரர்கள் இல்லாமையால் கிரிக்கெட் தன் தலையை உள்ளுக்கிழுத்துக் கொண்டு ஆமை போல் அடங்கி விட்டது என்றாலும் கோல்- பந்து விளையாட்டில் மக்களுக்கு ஆர்வம் குன்றவோ குறையவோ இல்லை.

ஆர்வம் குறையாத அந்நாட்டு மக்களிடையே அப்பொழுதுதான் தஞ்சமடைந்தது வளைகோல் பந்தாட் டம். புதிய விளையாட்டில் ஆர்வமும் அன்பும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறின. காலத்தால் இந்த ஆட்டம் பழமையானதாக இருந்தாலும், தான் கொண்ட கோலத் தால் மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. ஆட்டத்தில் எழுகின்ற சுவையையும் இன்பத்தின் மிகுதி யையும் கண்ட ஆங்கிலேயர்கள், ஆட்டத்தை சிறந்த முறை. யிலே பயன்படுத்திக் கொண்டனர். சட்டத்தின் இரும்புப் பிடியும் சிறிது சிறிதாகக் குறைந்தது. ஆட்டத்தின் செழுமைக்காக, சிறப்பான விதிகள் உண்டாக்கப் பட்டன. ஆட்டமும் சிறந்த முறையில் செப்பனிடப் பட்டது. விதிகள் பல மாறி மாறி வந்தன. வளர்ந்தன.

1886ஆம் ஆண்டு மார்க்கியூசினுடைய கியூன்ஸ் பெர்ரி” விதிகள் தான் முதன் முதலில் இந்த ஆட்டத்தில் கடைப் பிடிக்கப்பட்டு வந்தன. பிறகு அநேக முறைகளிலும், வழிகளிலும் ஆட்டத்தில் நிகழ்ந்த குறைகளை நீக்கி,