பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 62 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

இங்கிலாந்தின் விம்பிள்டன் வளைகோல் பந்தாட்ட சங்கம்’ (Wimbledon Hockey Club) 60@35&srt egy #$ $ $ $ 55. இதல்ை விளையாட்டில் வேகம் நிறைந்தது. அபாயம் அதிகம் நேரா வண்ணம் தடுத்திடவும் வாய்ப்பளித்தது.

நாட்டு மக்களிடையே நல்லதொரு ஆர்வ உணர்ச்சியும் ஆதரவும் கிட்டின. ஆண்கள் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த இந்த ஆட்டத்தின் பால், அணங்குகளிடையேயும் ஆர்வம் மிகுந்தெழ ஆரம்பித்தது. பெண்கள் ஆதரவு இருந்தால் பெருகி வளராததும் பாரில் உண்டோ?

அதன் பயனுக 1887ஆம் ஆண்டு இந்த விளையாட்டு இங்கிலாந்தின் பெண்களுக்கான தேசிய விளையாட்டாக (National Game) மாறியது. விதிகளை மதித்து அதனோடு இணைந்து, ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து ஆடினல், வளைகோல் பந்தாட்டத்தை விட இன்பம் தரும் குழு விளையாட்டு’ (Team Game) வேறு எதுவுமே இல்லை என்பதாலோ என்னவோ, மென்மையுடன் விளங்கும் பெண்களும், உண்மையிலே விரும்பி உலகெங்கிலும் ஆடுகின்றார்கள் போலும். இருபாலாரின் இதயங்களிலும் நிறைந்து விட்டதால், இதன் வளர்ச்சி வளர் பிறையாகவே மாறி விட்டது.

விதிகளின் வளர்ச்சி

தென் இலண்டனில் அமைந்திருக்கும் விம்பிள்டன் வளைகோல் பந்தாட்ட சங்கத்தால், 1883ஆம் ஆண்டு விதிகள் திருத்தி அமைத்து செப்பனிடப் பட்டன. இந்த ஆட்டத்தை விளையாடத் தொடங்கிய காலத்தில், ஆடுவோரிடத்தில் முரட்டுத் தனமும், ஆளோடு ஆள் முட்டிக் கொள்ளும் அதிசூரத்தனமும்தான் அதிகமாக இருந்தன. பந்தை அடிப்பதும் ஒடுவதுமே (Hit and Run) முக்கிய நோக்கமாக இருந்தது. மென்மைக்கும் மிருதுத்