பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 163

தன்மைக்கும் ஆட்டத்தில் இடம் ஏற்படாதா என்று ஏங்கும் அளவுக்கு வலிமையும், முரட்டுத் தனமும் ஆட்டத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தன.

ஆ2ள அடி, பந்தை அல்ல என்ற நிலை மாறி, பந்தை 917, -9%Tujab’ (Hit the ball, not the man) GT6% of சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி வந்தது.

பதினொரு பேர் ஒரு குழுவில் உள்ளனர் என்றால், அதில் எட்டு பேர் முன்னுட்டக்காரர்களாக (Forwards)வும், மூவரில் ஒருவர் இலக்குக் காவலராகவும் (Goal Keeper): இருவரே கடைக் காப்பாளராகவும் (Backs) இருந்திருக் கின்றனர். அவர்கள் நோக்கமெல்லாம் எதிர் இலக்கில் எப்படியாவது பந்தை அடித்து வெற்றி எண்’ (Goal) பெற வேண்டும் என்பது தான். தடுப்பதற்கும், காப்பதற்கும் அவர்கள் முயற்சி செய்யவில்லை.

இந்த நிலை மாறி, முன்னுட்டக்காரரின் எண்ணிக்கை 8லிருந்து ஏழாகி, ஏழு ஆருகி, ஆறு ஐந்தாகி, அந்த ஐந்தும் கடைசியில் மாருமல் நின்றே விட்டது. இந்த முதல் விதித் திருத்தமே, ஆட்டத்தின் வளர்ச்சிக்கு நல்ல வழி அமைத்துத் தந்து விட்டது.

இதன் பிறகு தோன்றிய விதிகள் எல்லாம், ஆட்டத்தில் நிகழ்கின்ற ஆபத்தைக் குறைப்பதற்கும், ஆட்டத்திற்கு சிறப்பும், வேகமும், விறுவிறுப்பும் தருவதற்காகவுமே அமைந்தன.

1886ஆம் ஆண்டு, முதன் முதலாக அடிக்கும் வட்டம்’ (Striking Circle) ஒன்று D போன்ற எழுத்து வடிவம் உள்ளது போன்ற அமைப்பில் ஏற்படுத்தப் பட்டது.

1889ஆம் ஆண்டு, ஆடுகளத்தின் நிலையான எல்லே நிறுவப்பட்டது. நீளம் 100 கெசம், அகலம் 60 கெசம்.