பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

இவ்வாறு விதிகளில் செழுமை பெற்ற ஆட்டம், நாடெங்கும் பரவியது. ஆட்டத்தை ஒலிம்பிக் போட்டி களில் ஒன்றாக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சி அதிக மாக எழுந்தது, இதல்ை 1900ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்த விளையாட்டு:

இடம் பெற்றது.

விருந்துக்கு வந்திருந்த வெளி நாட்டுக் குழுவினர்கள், அந்த நாட்டுக் குழுவினரோடு ஆடினர்களே தவிர, இறுதி வெற்றி எதுவுமே குறிப்பிடப் படவில்லை. இம்முறையால், நாடுகளுக்கு இடையே இருந்த விளையாட்டின் வளர்ச்சியை யும், உற்சாகத்தையும் காண முடிந்ததே தவிர, இதுதான் போட்டி ஆட்டம்’ (Tournament) என முடிவு செய்யப் படவில்லை,

தொடர்ந்து வந்த அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில், 1908ஆம் ஆண்டு ஆட்டம் இணைக்கப்பட்டது.

1908, 1920ஆம் ஆண்டுகளில் நடந்த வளைகோல் பந்தாட்ட ஒலிம்பிக் போட்டியில், பிரிட்டனே வெற்றி முடி சூடிக் கொண்டது. இங்கிலாந்தே வளைகோல் வாழ்வுக்கும் வழி வகுத்தது’ என்று வாயார வாழ்த்தி விட்டு, இங்கி லாந்திலிருந்து இந்தியாவுக்கு வருவோம். ஏனெனில் இன்று தலை சிறந்த ஆட்டக்காரர்கள் இருப்பது இங்கு தானே!

இந்தியாவில் வளைகோல் பந்தாட்டம்

பழங்கால இந்தியாவில் ஒரு வகையான பண்படாத நிலையில் அமைந்த வளைகோல் பந்தாட்டம் ஒன்று நிலவி வந்த தென்றும், இங்கிலாந்திலிருந்து முறையான தெளிவான முறையில் உருவான வளைகோல் பந்தாட்டம் வருவதற்கு முன்னமே, இந்த ஆட்டம் பல வகையான பெயர்களிலே