பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

உலவ விட்ட பெருமை இங்கிலாந்தையே சாரும் என்று

நாம் உறுதியாகக் கூறலாம்.

வளர்ச்சி

பதினேரும் நூற்றாண்டில் காற்றடித்த பசுத் தோல் பை கால்பந்தாக மாறிய பிறகும் ஆட்டத்தில் முரட்டுத் தனமும் முரண்பட்ட செயலும் அதிகமாக இடம் பெற்று வந்தன. காரணம் அந்தத் தோல் பை மண்டை ஓடாக நினைவில் கொள்ளப் பட்டதேயாகும். இந்த சூழ்நிலையிலே தான் ஆட்டம் அதிக அளவில் வளர ஆரம்பித்தது.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு வந்தது. கால் பந்தாட்டத்திற்கு மறுமலர்ச்சியைத் தருகின்ற காலமாக அமைந்தது. ‘அடிப்படை விசிகன் (Fundamental Rules)

எதுவும் இல்லை. ஆடுவோர் எண்ணிக்கைக் கணக்கிடப்பட வில்லை, இலக்கும் இல்லை”. இருந்தாலும் ஆட்டம் மக்களுக்கு உற்சாகம் தருவதாய் அமைந்திருந்தது.

ஆடுகின்ற இரு குழுக்களும் (Teams) இரு நகரங்கள் ஆகும். (Town) பந்தைத் தூக்கி மேலேயிருந்து கீழே போட்டால், அதுவே ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று அர்த்தம். ஒரு குழுவில் ஆட்டக்காரர்கள் நூற்றுக்கு மேற் பட்டு இருப்பார்கள். அக்குழுவில் இடையிடையே பொது மக்கள் வந்து சேர்ந்து கொண்டேயிருப்பார்கள். எதிர்க் குழுவிற்கு உரிமையான நகருக்குள் கொண்டு போய் பந்தை அடித்துத் தள்ளுவதுதான் ஆட்டத்தின் நோக்கம்.

அதற்காக ஆடுவோர்கள் எந்தவிதமான முறைகளையும் முயற்சிகளையும் பின்பற்றத் தயங்குவதேயில்லை. வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பந்தை உதைப்பதும், வேண்டும் என்றே ஆளை உதைப்பதும், இன்னும் இழிவான முறை களிலும் அவர்கள் ஆடத் தொடங்கினர்கள். விளையாடத்