பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{7() விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

போட்டிகளில் கலந்து கொள்ள முயன்றும், ஆசை நிறைவேரு து, இறுதியாக 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம். ( msterdam) நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில். இந்தியா கலந்து கொண்டது.

எந்த நாட்டோடும் ஒரு முறையேனும் தோல்வி அடையாமல் (இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் ஒரு. வெற்றி எண் (கோல்) கூட பெறவில்லை என்பது குறிப்பிடற் குரியது) இறுதிப் போட்டியில் ஹாலந்தை (Holland) வெற்றி கொண்டது.

இதன் பின்னர் தொடர்ந்து வந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (1932, 1936, 1948, 1952, 1956) வெற்றி பெற்று வீரமுடியை குடிக் கொண்டது. ஆனல் 1958ஆம் ஆண்டில் ஆசியப் போட்டியிலும், 1960ஆம் ஆண்டு. நடந்த ஒலிம்பிக் போட்டியிலும், பக்கத்து நாடான பாகிஸ்தானிடம் எதிர்பாராத விதமாகத் தோல்வியுற்றது.

ஆனலும் 1963ஆம் ஆண்டு நடத்தப் பெற்ற அகில உலகப் போட்டியான லியான்ஸ் தொடர் போட்டியில்’ (Lyons Tournament) பாரதம் தன்னுடைய பழைய நிலையை அடைந்து, வெற்றி கண்டு, தன் முதல் இடத்தைத் திரும்பப்

பெற்றது.

இந்திய வளைகோல் பந்தாட்டக் கழகத்தின் ஆதரவில் நடந்த தேசிய வெற்றிப் போட்டி, 1928ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப் பெற்றது. 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டுதோறும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

1951ஆம் ஆண்டு சென்னை மாநிலம் முதன் முதலாகத். தேசிய வெற்றிப் போட்டியை நடத்தியது. அதற்கான

பரிசுக் கோப்டையின் பெயர் ரெங்கசாமி என்பவரின்