பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 173.

இரு குழுவிலுள்ள ஆட்டக்காரர்கள் எல்லோரும் தாங்கள் ஆடுகின்ற இடத்தில் (Position) போய் நின்று கொள்ள வேண்டும். இரண்டு குழுவுக்கும் உள்ள முன்னுட்டக்காரர்கள் நடு இடத்தை வகிக்கும் மைய ஆட்டக்காரர் (Centre forwards) இருவரும், நடுக்கோட்டை மையமாக்கி, எதிரெதிரே நின்று, நடுவரின் குழலொலிக்குப் பிறகு இருவரும் (இரண்டு கால்களையும் பிரித்து வைத்து நடுக் கோட்டில் நிற்கும் நிலையில்) மையத்தில் உள்ள பந்தின் பக்கமாக இருவரும் சேர்ந்தாற் போல் தரையில் தட்டி, பின்னர் அடுத்தவரது வளைகோலில் தட்ட வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை தரையிலும், அடுத்தவர் வளைகோலிலும் மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாகத் தட்டிய பின்னரே, பந்தைக் கோலினல் தொட்டு ஆட வேண்டும். இந்த முறையைத் தான் புல்லி (Bully) என்கிருேம், இதற்குப் பிறகுதான் ஆட்டம் முறையாகத் தொடங்கி வைக்கப்படுகிறது.

எதிர்க் குழுவினருக்கு உரியதான இலக்கினுள் (Goa | (இரண்டு கம்பங்களுக்கு நடுவில், குறுக்குக் குச்சியின் கீழே. கி ைடக் கோட்டைத் தாண்டி) பந்தை அனுப்புவதே ஆட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இப்படி அனுப்பிய குழுவுக்கு 1 வெற்றி எண் (Goal) கிடைக்கும்.